
செய்திகள் தமிழ் தொடர்புகள்
கலைஞரின் கலையுலக வாரிசான மு.க.முத்து மரணம்
சென்னை:
தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.
முன்னாள் முதல்வர் கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு மகனாக பிறந்த மு.க.முத்து 1970-களில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். ‘பிள்ளையோ பிள்ளை’, ‘சமையல்காரன்’, ‘அணையாவிளக்கு’, ‘இங்கேயும் மனிதர்கள்’ ‘பூக்காரி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தான் நடித்த படங்களில் சில பாடல்களையும் பாடியிருக்கிறார். திமுக மேடைகளிலும் கட்சியின் கொள்கை விளக்க பாடல்களை பாடியுள்ளார்.
எம்.ஜி.ஆருக்கு போட்டியாக சினிமாவில் களமிறக்கப்பட்டவர் என்ற பொதுவான கருத்து நிலவினாலும், மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்து கிளாப் அடித்து எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு தேவா இசையில் ’மாட்டுத் தாவணி’ என்ற படத்தில் ஒரு பாடல் பாடியிருந்தார் மு.க.முத்து.
இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மு.க.முத்து சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 19) காலமானார். அவரது உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மு.க.முத்துவின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மு.க.முத்துவின் மறைவையொட்டி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2025, 2:28 pm
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் அன்வர் ராஜா: திமுகவில் இணைந்தார்
July 20, 2025, 3:43 pm
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல: எடப்பாடி பழனிசாமி சூளுரை
July 20, 2025, 8:54 am
திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு: 403 நட்சத்திர ஆமைகள் மலேசியாவுக்கு கடத்த முயற்சி
July 19, 2025, 9:20 pm
கொடைக்கானலில் சட்டவிரோத தங்கும் விடுதிகள்: புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்
July 18, 2025, 5:28 pm
தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருக்கிறீர்களா?: எடப்பாடி பழனிசாமி சூசகமான பதில்
July 18, 2025, 4:32 pm
விஜய் தலைமையில் ஜூலை 20இல் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
July 18, 2025, 2:54 pm
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: சென்னை வானிலை மையம் தகவல்
July 14, 2025, 4:15 pm