நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அர்ஜெண்டினாவுடன் கடைசி போட்டியா? ஓய்வு பெறுவதை மறைமுகமாகக் குறிப்பிட்ட மெஸ்ஸி

நியூயார்க்:

அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, தேசிய அணியில் தனது எதிர்காலம் குறித்து முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர் 4ஆம் தேதி  வெனிசுவேலாவுக்கு எதிராக பியூனஸ் அயர்ஸில் நடைபெற உள்ள கால்பந்து உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டி, அர்ஜென்டினாவின் சொந்த மண்ணில் அவருக்குக் கடைசிப் போட்டியாக இருக்கலாம் என்று அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆட்டம் தனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த போட்டி என்று மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினா அணி தென் அமெரிக்கத் தகுதிச் சுற்றில் 35 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து, 2026 உலகக் கிண்ண போட்டிக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டபோதிலும், மெஸ்ஸியின் கவனம் இந்தப் போட்டியின் உணர்வுபூர்வமான முக்கியத்துவத்தின் மீது உள்ளது.

தனது மனைவி, குழந்தைகள், பெற்றோர், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு, தனது சொந்த மண்ணில் கடைசிப் போட்டி இருக்கலாம் என்ற எண்ணத்துடன் அவர் அனுபவிக்க திட்டமிட்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset