நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெஸ்ஸியின் இரட்டை கோல்களால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தர்மியாமி

நியூயார்க்:

லீக்ஸ் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இந்தர்மியாமி அணி 3-1 என வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி அசத்தலாக இரண்டு கோல்களை அடித்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

அமெரிக்காவின் சேஸ் அரங்கில் நடைபெற்ற லீக் கிண்ண  அரையிறுதிப் போட்டியில் இந்தர்மியாமியும் ஆர்லண்டோ சிட்டியும் மோதின.

இந்தப் போட்டியில் முதல் பாதியின் கடைசி நேரத்தில் ஆர்லண்டோ சிட்டி 1-0 என முன்னிலைப் பெற்றது.

77ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி பெனால்டியில் கோல் அடித்து 1-1 என சமநிலை செய்தார்.

பின்னர் 88ஆவது நிமிடத்தில் இன்னொரு கோல் அடித்து 2-1 என முன்னிலைப் பெறச் செய்தார்.

கடைசியில் டெலஸ்கோ செகோவியோ 90+1 ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 3-1 என அபார வெற்றி பெற்றது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset