நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலக சாம்பியன் பூப்பந்து போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சென் - டோ வரலாறு படைத்தனர்

பாரிஸ்:

உலக சாம்பியன் பூப்பந்து போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று தேசிய கலப்பு இரட்டையர்களான சென் டாங் ஜீ - டோ ஈ வெய் வரலாறு படைத்தனர்.

உலக சாம்பியன் பூப்பந்து போட்டி பிரான்ஸ் பாரிசில் நடைபெற்றது.

இதில் கலப்பு இரட்டையர்  பிரிவில் மலேசியாவின் சென் டாங் ஜீ - டோ ஈ வெய் ஜோடி சீனாவின் ஜியாங் ஜென்பாங், வெய் யாக்சின் ஜோடியை சந்தித்தது.

இதில் முழு திறனை வெளிப்படுத்தி விளையாடிய மலேசிய ஜோடி 21-15, 21-14 சீன ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து மலேசியாவின் சென் டாங் ஜீ - டோ ஈ வெய் உலக பூப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தனர்.

இந்த வெற்றியை பெற்ற மலேசிய போட்டியாளர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராஹிம் வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும் இது மலேசியாவிற்கு ஒரு சுதந்திர தின பரிசு என குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset