நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

போலிஸ் விசாரணையில் பலியான அஜித்குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்

திருப்புவனம்:

போலிஸ் விசாரணையில் பலியான அஜித்குமார் இல்லத்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், அவர்களுக்கு தவெக சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணமாகக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், 

தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாகவும் குடும்பத்தாரிடம் விஜய் தெரிவித்தார்.

முன்னதாக வீட்டில் இருந்த அஜித்குமார் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். 

அப்போது, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

போலிஸ் விசாரணையில் அஜித்குமார் என்ற இளைஞர் பலியான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தவெக தலைவர் விஜய்யும் அஜித்குமார் இல்லத்திற்குச் சென்று இன்று ஆறுதல் கூறினார்.

போலிசாரின் இத்தகைய கொடூரமான நடவடிக்கையை கண்டித்து தவெக சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset