
செய்திகள் தமிழ் தொடர்புகள்
இஸ்ரேல் - ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும்: சீமான்
சென்னை:
இஸ்ரேல் - ஈரான் நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடும் போர் மூண்டுள்ள ஈரான், இஸ்ரேல் நாடுகளில் பல்வேறு பணிகளுக்காக சென்றுள்ள தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
ஈரான் நாட்டுக்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள், தாயகம் திரும்ப போதிய பணமின்றி தவித்து வருகின்றனர்.
இத்தனை பெரிய கடற்பரப்பு இருந்தும், தமிழக மீனவர்கள் வாழ வழியின்றி கடல்கடந்து அயல்நாடுகளுக்குச் சென்று மீன்பிடித் தொழில் செய்ய வேண்டிய அவலநிலை நிலவுகிறது. இத்தகைய சூழலில், ஈரான் - இஸ்ரேல் நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் மீட்டுவந்து, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய அரசின் தூதரகங்கள் மூலம் தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவு படுத்துவதுடன், பயணச் செலவை மத்திய, மாநில அரசுகளே முழுமையாக ஏற்க வேண்டும்.
இவ்வாறு சீமான் வலியுறுத்தியுள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 5:53 pm
தூத்துக்குடியில் மிதவை கப்பலின் டேங்கை சுத்தம் செய்த 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
September 17, 2025, 4:04 pm
பெரியார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
September 15, 2025, 12:26 pm
வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை
September 13, 2025, 2:27 pm
விஜய் வருகையால் அதிர்ந்த திருச்சி: மரக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
September 13, 2025, 7:32 am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
September 12, 2025, 9:08 pm
நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
September 11, 2025, 10:54 pm
ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும்: சீமான்
September 10, 2025, 1:43 pm