
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை பல்கலைக்கழகத்தில் ‘நான் முதல்வன்' திட்ட பயிற்சி முகாமில் பல்லி விழுந்த பயறு வழங்கியதாக பேராசிரியர்கள் போராட்டம்
சென்னை:
சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘நான் முதல்வன்’ திட்ட பயிற்சி முகாமில் பல்லி விழுந்த பயறு வழங்கியதாக பேராசிரியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, தனியார் சுயநிதி கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சி இடைவேளையின்போது தேநீர் பலகாரம் வழங்கப்படும். அந்த வகையில் தேநீரும் பெரும்பயறும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்ததது.
அப்போது பல்கலைக்கழக ஊழியர் ஒருவர், பெரும்பயறு இருந்த பாத்திரத்தில் பல்லி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதற்கிடையே, 30-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பெரும்பயறை சாப்பிட்டு முடித்துவிட்டனர். பல்லி இறந்து கிடந்த தகவல் தெரிய வந்ததும் பேராசிரியர்கள் அனைவரும் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து திடீர் போராட்டத்தில் இறங்கினர்.
இதற்கிடையே, பெரும்பயறை சாப்பிட்ட பேராசிரியர்கள் தங்களுக்கு ஏதாவது உடல்நிலை பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில், உடனடியாக தங்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 9:31 am
பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm
நாளை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல் வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm
தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
July 7, 2025, 10:22 pm