
செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஏடிஜிபி கைதுக்கு உத்தரவிட்ட நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புது டெல்லி:
சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் ஏடிஜிபியை கைது செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
பணியில் உள்ள ஏடிஜிபியை கைது செய்ய உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது, இப்படியொரு அதிகாரம் இருப்பதாக தங்களுக்குத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஏடிஜிபியின் இடைநீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்குமாறு உத்தரவி்ட்டுள்ளனர்.
கடத்தல் சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை தொழிலதிபர் வனராஜா, முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரி உள்ளிட்ட 5 பேரை திருவாலங்காடு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கடத்தலில் பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ மற்றும் ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த மனு மீது விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த ஏடிஜிபி ஜெயராமின் கார் கடத்தல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் அவரை விசாரித்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அடுத்த விசாரணையை ஜூன் 26-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
ஜெயராமை இடைநீக்கம் செய்து தமிழக உள்துறைச் செயலர் உத்தரவிட்டார்.
சிறுவன் கடத்தல் வழக்கில் தன்னை கைது செய்து விசாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஏடிஜிபி ஜெயராம் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், ஏடிஜிபி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்போது அவரை இடைநீக்கம் செய்தது ஏன்? தமிழக அரசு இதுபோல செய்திருக்கக் கூடாது. இந்த இடைநீக்கம் 28 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் மூத்த போலீஸ் அதிகாரியின் மனஉறுதியை குலைத்துவிடாதா? இடைநீக்கத்துக்கான அவசியம் என்ன? என்று அரசுத் தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.
மேலும், நீதிபதி மன்மோகன், எனது 18 ஆண்டுகால பணி அனுபவத்தில் நீதிபதிகளுக்கு இப்படியொரு அதிகாரம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 9:31 am
பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm
நாளை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல் வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm
தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
July 7, 2025, 10:22 pm