
செய்திகள் மலேசியா
பகாங் ரவூப்பில் நில ஆக்கிரமிப்பு வழக்கில் தொடர்புடைய நபர்களின் பட்டியல் எம்ஏசிசியிடம் உள்ளது: டான்ஶ்ரீ அசாம் பாக்கி
புத்ராஜெயா:
பகாங் ரவூப்பில் நில ஆக்கிரமிப்பு வழக்கில் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட நபர்களின் பட்டியல் ஏம்ஏசிசியிடம் உள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி இதனை கூறினார்.
இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
நிலம், சுரங்க அலுவலகம், மாவட்ட அலுவலகங்களில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட நபர்களை எம்ஏசிசி விசாரணை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இதில் சம்பந்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட நபர்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது.
அது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சம்பவம் நடந்தது நடந்திருந்தால், நிச்சயமாக கேள்விக்குரிய சில அதிகாரிகள் ஓய்வு பெற்றிருப்பார்கள்,
எனவே, எனது விசாரணை அதிகாரிகளுக்கு அந்த நேரத்தில் பணியில் இருந்தவர்களின் பின்னணியைச் சரிபார்ப்பது ஒரு சவாலாகும்.
இது சிறிது நேரம் எடுக்கும். குறிப்பாக விசாரணை செய்பவர்களுக்கும் அவர்கள் அதை எவ்வாறு செய்தார்கள் என்பதும் அதில் அடங்கும் என்று டான்ஶ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm