
செய்திகள் மலேசியா
இஸ்மாயில் சப்ரி மீதான எம்ஏசிசி விசாரணை சுமார் 20 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது: அசாம் பாக்கி
புத்ராஜெயா:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சம்பந்தப்பட்ட ஊழல், பணமோசடி வழக்குகள் தொடர்பான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை சுமார் 15 முதல் 20 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி இதனை தெரிவித்தார்.
இஸ்மாயில் சப்ரியிடமிருந்து வாக்குமூலம் பெறும் அமர்வு, விசாரணை அதிகாரிகளால் சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு தொடரும்.
நாங்கள் அவரிடம் பல ஆவணங்களை வழங்குமாறு கேட்டுள்ளோம். இந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த முறை நான் குறிப்பிட்டது போல இது அவரது சொத்து அறிவிப்பு தொடர்பானது.
இன்று புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய ஊழல் எதிர்ப்பு மாநாட்டை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, இஸ்மாயில் சப்ரிக்கு எம்ஏசிசி ஏழு முறை விசாரணைக்கு வர சம்மன் அனுப்பியிருந்தது. ஆக கடைசியாக கடந்த வியாழக்கிழமை சம்மன் அனுப்பப்பட்டது.
ஆகஸ்ட் 2021 முதல் நவம்பர் 2022 வரை ஒன்பதாவது பிரதமராக இருந்த காலத்தில், மலேசியா குடும்பத் திட்டத்தின் விளம்பரம், விளம்பரத்திற்காக நிதி செலவழித்தல், கையகப்படுத்துதல் தொடர்பாக ஊழல், பணமோசடி செய்ததற்காக அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm