நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்தாப்பாக் உயர் நிலை இடைநிலைப்பள்ளி  தங்கும் விடுதியில் தீ விபத்து; உடனடி உதவிகள் வழங்கப்படும்: ஃபட்லினா

கோலாலம்பூர்:

ஸ்தாப்பாக் உயர் நிலை இடைநிலைப்பள்ளி தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அப்பள்ளிக்கு உடனடி உதவிகள் வழங்கப்படும்.

கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.

ஸ்தாப்பாக் உயர் நிலை இடைநிலைப்பள்ளி தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.

இந்த நேரத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், அனைத்து பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது.

மேலும் சம்பந்தப்பட்ட அனைவரின் நல்வாழ்வையும் உறுதி செய்வதற்காக உடனடி உதவி வழங்கப்படும்.

இதில் பள்ளியின் தங்கும் விடுதியின் சீரமைப்புப் பணிகளுக்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

முன்னதாக தங்கும் விடுதி தீ விபத்தில் 80 சதவீதம் சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset