நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கந்த சஷ்டி கவசப் பாராயணம்; மே 1ஆம் தேதி பத்துமலையில் நடைபெறுகிறது: டத்தோ சிவக்குமார்

பத்துமலை:

கந்த சஷ்டி கவசப் பாராயணம் விழா  மாபெரும் அளவில் வரும்   மே 1ஆம் தேதி பத்துமலையில் நடைபெறவுள்ளது.

மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் ஆதரவுடனும் அதன் தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா தலைமையிலும் இவ்விழா நடைபெறவுள்ளது.

மஹிமாவும் டிஎஸ்கே குழுமமும் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

பத்துமலையில் அமைந்துள்ள 140 அடி முருகப் பெருமான் அடிவாரத்தில் இவ்விழா நடைபெறவுள்ளது.

காலை 8 மணிக்கு மங்கள வாத்தியம், விநாயகர் வழிபாட்டுடன் இவ்விழா தொடங்கவுள்ளது.

அதனைத் தொடர்ந்து வேல் மாறல், ஆன்மீக சொற்பொழிவு, காவடி சிந்து குழுவினரின் காவடி ஆட்டமும் இடம் பெறும்.

காலை 8.30 மணிக்கு கந்த சஷ்டி பாராயணம் நடைபெறும்.

இதன் பிறகு பக்தர்களுக்கு பன்னீர் வழங்கப்படும். மேற்குகை ஶ்ரீ வேலாயுதப் பெருமானுக்கு பனீர் அபிஷேகம் நடைபெறும்.

மேலும் குகாஶ்ரீ ஆர். விஜயகுமார் முருகன் பெருமை ஆன்மீக சொற்பொழிவும் ஆற்றவுள்ளார். இறுதியாக மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

ஆகவே பொதுமக்கள் திரளாக வந்து இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு டத்தோ சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset