
செய்திகள் மலேசியா
மஇகா தலைமையகத்தில் கல்வியும் கருணையும் இசை விருந்து
கோலாலம்பூர்:
மஇகா கெப்போங் தொகுதி கோலாலம்பூர் கல்வி புத்தாக்க ஆன்மா இயக்கத்துடன் இணைந்து கல்வியும் கருணையும் எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சி ஏப்ரல் 30 ஆம் தேதி புதன்கிழமை இரவு 7. 00 மணிக்கு மஇகா நேதாஜி மண்டபத்தில் நடைபெறும்.
மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணிகளும் மூவருக்கு மருத்துவ நிதி உதவியும் வழங்கப்படும் என்று மஇகா கெப்போங் தொகுதி தலைவர் இரா. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மஇகா உதவி தலைவர்கள் டத்தோ டி. முருகையா, டத்தோஸ்ரீ சா. வேள்பாரி, மஇகா கூட்டரசு பிரதேச தொடர்பு குழு தலைவர் டத்தோ ராஜா சைமன், மத்திய செயலவை உறுப்பினர் அன்ட்ரூ டேவிட் ஆகியோர் சிறப்பு வருகை புரிவர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm