நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்தாப்பாக் உயர் நிலை இடை நிலைப்பள்ளி தீ விபத்தில் 90 மாணவர்களை காப்பாற்றிய இஷா தொழுகை

கோலாலம்பூர்:

ஸ்தாப்பாக் உயர் நிலை இடை நிலைப்பள்ளி தீ விபத்தில் 90 மாணவர்களை காப்பாற்றிய சூராவில் நடந்த இஷா தொழுகை காப்பாறியுள்ளது.

நேற்று இரவு சம்பந்தப்பட்ட பள்ளியின் தங்குமிடத்தில் மோசமான தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து சம்பவம் நடந்த நேரத்தில் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட  மாணவர்கள் அனைவரும் பள்ளி சூராவ்வில் இருந்தனர்.

இந்த தீ விபத்து குறித்து இரவு 8.43 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது என்று கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் மூத்த செயல்பாட்டு அதிகாரி ஜபாரி தாஜுடின் கூறினார்.

 அவசர மருத்துவ சேவைகள் குழுவுடன் சேர்ந்து, ஸ்தாப்பாக், செந்தூல், ஜாலான் ஹாங் துவா, தென் கோம்பாக்  ஆகிய  தீயணைப்பு,  மீட்பு நிலையங்களில் இருந்து நான்கு  தீயணைப்பு வண்டியும் அதிகாரிகல் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

பள்ளியில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதைக் கண்டறிந்தனர்.

40 பணியாளர்கள் உடனடி தீயணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இரவு 9.40 மணியளவில் தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது.

சில நிமிடங்களுக்குப் பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டதாகவும், தீயினால் 80 சதவீத சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset