நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய ஹஜ் யாத்ரீகர்களின் முதல் குழு புனித பூமிக்கு புறப்பட்டது

சிப்பாங்:

இந்த ஆண்டு ஹஜ் பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இன்று அதிகாலை மொத்தம் 284 மலேசிய யாத்ரீகர்கள் புனித பூமிக்கு புறப்பட்டனர்.

முதல் குழு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து அதிகாலை 4.05 மணிக்கு மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 8050 இல் புறப்பட்டு, 

உள்ளூர் நேரப்படி  காலை 7.50 மணிக்கு மதீனாவின் இளவரசர் முகமது பின் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கெடாவில் உள்ள அலோர் ஸ்டார் நிலையத்திலிருந்தும் சிலாங்கூரில் உள்ள சிப்பாங்கிலிருந்தும் புறப்பட்ட யாத்ரீகர்களும் இதில் அடங்குவர்.

இந்த பருவத்தில் 31,600 யாத்ரீகர்களை புனித பூமிக்கு அழைத்துச் செல்லப்பட்டவுள்ளனர்.

இதற்காக மலேசியா ஏர்லைன்ஸ், சவூதியா ஏர்லைன்ஸ் மூலம் அமால் திட்டத்தின் வழியாக 100 விமானங்கள் தயாராக உள்ளன என்று பிரதமர் துறை மத விவகாரங்கள் அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நயிம் மொக்தார் தெரிவித்தார்.

பயணத்திற்கான ஆரம்ப ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஏப்ரல் 24 ஆம் தேதியிலேயே தாபோங் ஹாஜி சவூதி அரேபியாவிற்கு ஹஜ் பணியாளர்களை அனுப்பத் தொடங்கியது.

மலேசிய ஹஜ் யாத்ரீகர்களை புனித பூமிக்கு விடைபெறும் விழாவில் கலந்து கொண்டபோது அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset