
செய்திகள் மலேசியா
ஆலயத்துக்கு முன் பட்டப்பகலில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: இரு ஆடவர்களின் துணிகரச் செயல்
கோலாலம்பூர்:
ஆலயத்துக்கு முன் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்கள் பெண்ணின் சங்கிலி பறிப்பு சென்றுள்ளனர்.
வாங்சாமாஜு துணை போலிஸ் தலைவர் சியாருல் அனுவார் அப்துல் வஹாப் இதனை தெரிவித்தார்.
கம்போங் பாண்டன் விநாயகர் ஆலயத்துக்கு முன் முன் ஒரு வயதான பெண்ணிடம் அவர்கள் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர்.
பிற்பகல் 2 மணியளவில் நடந்த சம்பவத்தில் 60 வயதுடைய பாதிக்கப்பட்டவர் தனது வாகனத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சந்தேக நபர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்து சென்றனர்.
சந்தேக நபரை பிடிக்க பொதுமக்கள் பலர் முயன்றனர். ஆனால் அவர்கள் தோல்வியடைந்தனர்.
இந்த நேரத்தில், பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட இழப்புகளின் மதிப்பு தீர்மானிக்கப்படவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் மருமகன் தனது அத்தைக்கு உடல் ரீதியாக எந்த காயமும் ஏற்படவில்லை என்றும்,
ஆனால் அவர் இன்னும் அதிர்ச்சி நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
மேலும் தற்போது போலிஸ் நிலையத்தில் புகார் அளிக்க மறுத்துவிட்டதாக அவர் கூறினார்.
சந்தேக நபரைத் தடுக்க முயன்றபோது எனது தந்தையின் கையில் காயம் ஏற்பட்டது என அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm