நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண் ஒருவருக்காக ஏற்பட்ட பிரச்சினையால் வாடிக்கையாளர்கள் உணவுக் கட்டணம் செலுத்தாமல் ஓடி விட்டனர்: போலிஸ்

பங்சார்:

பெண் ஒருவருக்காக ஏற்பட்ட பிரச்சினையால் வாடிக்கையாளர்கள் உணவுக் கட்டணத்தை செலுத்தாமல் ஓடி விட்டனர்.

இதனால் பங்சாரின் ஜலான் தலாவியில் உள்ள நாசிகண்டார் உணவகத்தில் 5,000 ரிங்கிட்  நஷ்டம் ஏற்பட்டது என்று  பிரிக்பீல்ட்ஸ் போலிஸ் தலைவர் கு மஷாரிமான் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 5.40 மணியளவில் எட்டு முதல் 10 ஆண்கள் சம்பவ இடத்தில் சண்டையிட்டு கொண்டனர்.

இதன் விளைவாக உணவகத்தின் கவுண்டரின் கண்ணாடி சேதமடைந்தது. சாப்பாட்டு மேஜைகள் உடைந்தது.  மேலும் சுவரில் இருந்த அல்- குர்ஆன் வாசகங்கள் அடங்கிய பிரேம்களும் உடைந்தன.

அந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் சம்பவத்தால் பயந்து ஓடிவிட்டதால் உணவு கட்டணத்தையும் செலுத்தவில்லை.

போலிசார்  மூன்று சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

விசாரணையில் ஒரு கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் மற்றொரு கும்பலால் துன்புறுத்தப்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் இன்னும் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset