
செய்திகள் மலேசியா
அதிகமான வரிகளை விதிக்கும் நடவடிக்கை அமெரிக்காவைத்தான் அதிகம் பாதிக்கும்: துன் மகாதீர்
கோலாலம்பூர்:
அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வரிகள் தன்னைத்தானே தோற்கடித்துக் கொள்ளும். அதன் வர்த்தக கூட்டாளிகளை விட நாட்டையே அதிகம் பாதிக்கும்.
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இதனை கூறினார்.
சுமார் 60 நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 10% முதல் 49% வரையிலான வரிகள் அமெரிக்காவில் பொருட்களுக்கான விலை உயர்வைத் தூண்டும்.
இதனால் அதன் குடிமக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும்.
இது மலேசியாவையும் மற்ற அமெரிக்க வர்த்தக கூட்டாளிகளையும் எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றி நாங்கள் நிறைய பேசுகிறோம்.
ஆனால் கேட்கப்பட வேண்டிய கேள்வி என்னவென்றால், அமெரிக்காவிற்குள் என்ன நடக்கும் என்பது தான்.
அமெரிக்காவில் உள்ள அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும். மேலும் அவர்கள் அதிக வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வார்கள்.
பின்னர் அவர்களின் தொழிலாளர்கள் அதிக ஊதியத்தைக் கோருவார்கள். அவர்கள் போட்டித்தன்மையற்றவர்களாக மாறுவார்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm