
செய்திகள் மலேசியா
இந்தியர்கள் மத்தியில் ஒற்றுமை, சிந்தனை மாற்றம் அவசியம்: எதிர்கட்சி தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடின் தகவல்
கோலாலாம்பூர்:
இந்தியர்கள் மத்தியில் ஒற்றுமை, சிந்தனை மாற்றம் அவசியம். ஒற்றுமையால் மட்டுமே நமது வலிமையை நிரூபிக்க முடியும் என்று நாட்டின் எதிர்கட்சி தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடின் கூறினார்
நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொள்ள வேண்டும். இதனால் இந்தியர்களிடையே அரசியல் சிந்தனை மாற்றம் ஏற்படும்.
தற்போது நாட்டில் இனங்களுக்கிடையே பிரிவினைப் போக்கு அதிகம் உள்ளது. நடப்பு மடானி அரசாங்கம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது பெரும் வேதனையை அளிக்கிறது.
மலேசியாவில் கனிமவளங்கள் அதிகம் உள்ளது. அதனை கொண்டு நாம் நமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.
இந்திய சமூகத்திலும் அதிகமான சிக்கல்கள் உள்ளன. அதனை களைய தேர்தல் அரசியலில் தேசிய கூட்டணிக்கு இந்தியர்கள் தங்களின் ஆதரவினை வழங்க வேண்டும்.
தொலைதூர சிந்தனை இல்லாத காரணத்தால் தான் ம.இ.கா எனும் கட்சி காணாமல் போனது. இதனிடையே, தேசிய கூட்டணி, எம்.ஐ.பி.பி கட்சிகள் இணைந்து இந்திய சமூகத்தின் முன்னேற்ற பாதைக்கு இட்டுச்செல்லும் என்று அவர் சொன்னார்.
முன்னதாக, புரட்சி மலேசியா இயக்கத்தின் சார்பாக தலைவன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹம்சா சைனுடின் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார்
- மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm