
செய்திகள் மலேசியா
சக்தி ஈஸ்வரி ஆலயத்தில் 3 மில்லியன் ரிங்கிட் காணாமல் போனதா?: இந்து சங்கத் தலைவருக்கு எதிராக போலிஸ் புகார்
பெட்டாலிங் ஜெயா:
சக்தி ஈஸ்வரி ஆலயத்தில் 3 மில்லியன் ரிங்கிட் காணாமல் போனதாக குற்றம் சாட்டிய இந்து சங்கத் தலைவருக்கு எதிராக போலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாலயத்தின் முன்னாள் தலைவர் செல்வம் பரமசிவம் இதனை கூறினார்.
இம்மாத தொடக்கத்தில் மலேசிய இந்து ஆலயங்களுக்கு இடையிலான அவசரக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய போது இந்து சங்கத் தலைவர் இந்த ஆலயத்தின் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
குறிப்பாக சக்தி ஈஸ்வரி ஆலயத்தில் இருந்து 3 மில்லியன் ரிங்கிட் காணாமல் போய்விட்டது என குற்றம் சாட்டியுள்ளார்.
அப்படி என்றால் முன்னாள் நிர்வாகம் பணத்தை கொள்ளையடித்து விட்டதாக கேள்விகள் எழுந்துள்ளது.
இந்து சங்கத் தலைவரின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. இக்குற்றச்சாட்டை அவர் நிரூபிக்க வேண்டும்.'
இதன் அடிப்படையில் தான் அவருக்கு எதிராக போலிசில் புகார் செய்யப்பட்டது.
அதே வேளையில் அவருக்கு எதிரான மான நஷ்ட வழக்கும் தொடரப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm