நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்க  விளையாட்டுத் துறையே சிறந்த அடித்தளம்: தேவா

களும்பாங்:

இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்க விளையாட்டுத் துறையே சிறந்த அடித்தளமாகும்.

மைஸ்கில் அறவாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரி தேவா இதனை கூறினார்.

மைஸ்கில் அறவாரியத்தின் Dover Elevator இளையோர் கிண்ண கால்பந்து போட்டி இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

இப்போட்டியில் விளையாட்டாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.

மைஸ்கில் அறவாரியம் தொழில் திறன் கல்வியுடன் விளையாட்டுத் துறையிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.

இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்க விளையாட்டுத் துறையே சிறந்த அடித்தளமாக அமைகிறது.

அதன் அடிப்படையில் தான் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது.

வரும் காலங்களில் இன்னும் அதிகமான விளையாட்டு போட்டிகளை மைஸ்கில் அறவாரியம் நடத்தும் என்று தேவா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset