
செய்திகள் மலேசியா
மைஸ்கில் அறவாரியத்தின் இளையோர் கிண்ண கால்பந்து போட்டி: மைஸ்கில் அணி வாகை சூடியது
களும்பாங்:
மைஸ்கில் அறவாரியத்தின் இளையோர் கிண்ண கால்பந்து போட்டியில் மைஸ்கில் அணி முதல் நிலையில் வாகை சூடியது.
மைஸ்கில் அறவாரியத்தின் Dover Elevator இளையோர் கிண்ண கால்பந்து போட்டி இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
17 வயதுக்கு உட்பட்ட இந்த போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்றன.
இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய மைஸ்கில் அணியினர் முதல் நிலையில் வெற்றி பெற்றனர்.
ராயல் சிலாங்கூர் அணியினர் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றனர். களும்பாங் இடைநிலைப் பள்ளி அணியினர் மூன்றாவது இடத்தை பிடித்தனர்.
மைஸ்கில் அணியின் ஆட்டக்காரர் மகேஸ்வரன் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதை பெற்றார்.
களும்பாங் ஜூனியர் அணியின் அஷிம் முஹாய்மின் சிறந்த கோல் காவலராகவும் இறுதியாட்டத்தின் சிறந்த ஆட்டக்காரராக கோகுலன் தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி பெற்ற அணிகளுக்கும் போட்டியாளர்களுக்கும் பரிசுகளும் பதக்கங்களும் பரிசாக வழங்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm