நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் கூனிங் வெற்றி என்பது மக்களின் ஆதரவின் வெளிப்பாடாகும்: ஜாஹித்

கோலாலம்பூர்:

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் வெற்றி என்பது மக்களின் ஆதரவின் வெளிப்பாடாகும்.

துணைப் பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் முகமது யுஸ்ரி பக்கீரின் வெற்றி பெற்றார்.

அவரின் இந்த வெற்றி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்திற்கு மக்கள் அளித்த ஆதரவின் தெளிவான வெளிப்பாடாகும்.

இந்த முடிவு பேராக்கில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ சாரணி முஹம்மதின் தலைமையிலான ஒன்றுமை அரசாங்கத்திற்கு மக்கள் அளித்த ஆதரவின் அடையாளம்.

மேலும் முஹம்மது யுஸ்ரியின் வெற்றிக்கு அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி, முன்னாள் ஆயிர் கூனிங் மாநில சட்டமன்ற உறுப்பினர் மறைந்த இஷாம் ஷாருதீனின் சேவையை அப்பகுதி மக்களுக்குத் தொடர முடியும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset