நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணி 18,000 வாக்குகள் இலக்கை அடையாததற்கு குறைந்த வாக்குப்பதிவே காரணம்: மந்திரி புசார்

தாப்பா:

தேசிய முன்னணி 18,000 வாக்குகள் இலக்கை அடையாததற்கு குறைந்த வாக்குப் பதிவே காரணம்.

பேரா மாநில மந்திரி புசாரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ சாரணி முஹம்மத் இதனை கூறினார்.

இந்த இடைத் தேர்தலில் குறைந்தது 18,000 வாக்குகளைப் பெறுவதுதான் தேசிய முன்னணியின் இலக்காக உள்ளது.

கிட்டத்தட்ட 32,000 வாக்காளர்களிடமிருந்து 75% வாக்குகளைப் பெறுவதன் வாயிலாக இந்த இலக்கு அமைந்திருந்தது.

அதன் அடிப்படையில் இந்த முறை வாக்காளர் பட்டியலில் 31,897 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆனால் வாக்குப்பதிவு 58.07%ஐ மட்டுமே எட்டியது.

இந்த வாக்குப்பதிவு குறைந்தது தான் தேசிய முன்னணி இலக்கை அடையாததற்கு முக்கிய காரணம்.

இருந்தாலும் இந்த தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

ஒரு வாக்காக இருந்தாலும் அது வெற்றி தான் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset