நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்: யுஸ்ரி உறுதி

தாப்பா:

தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவேன்.

ஆயிர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் யுஸ்ரி பக்கீர் இதனை கூறினார்.

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் எனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றி.

அதே வேளையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது 7 வாக்குறுதிகளை  வழங்கினேன்.

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நான் உறுதியாக உள்ளேன்.

அதே வேளையில் ஆயிர் கூனிங் மக்களுக்காக தொடர்ந்து சேவையாற்றுவேன் என்று அவர் கூறினார்.

முன்னதாக இந்த தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் யுஸ்ரி பக்கீர் ஒட்டுமொத்தமாக 11,065 வாக்குகளைப் பெற்றார், 

அதே நேரத்தில் முஹைமின் 6,059 வாக்குகளையும், பவானி 1,106 வாக்குகளையும் பெற்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset