
செய்திகள் மலேசியா
காஷ்மீரில் நடந்தது மனிதாபிமானமற்ற தாக்குதல்: பிரதமர் கண்டனம்
புத்ராஜெயா:
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த சமீபத்திய தாக்குதலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இது ஒரு திட்டமிடப்பட்ட, மனிதாபிமானமற்ற தாக்குதல் என்று வர்ணித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் கொல்லப்படுவதற்கு முன்பு வேண்டுமென்றே தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அத்தகைய கொடுமை ஏற்றுக்கொள்ள முடியாதது.
எந்த நாகரிக சமூகத்திலும் அதற்கு இடமில்லை என்றும் டத்தோஶ்ரீ அன்வார் அறிக்கைகளை மேற்கோள் காட்டினார்.
அனைத்து மலேசியர்களின் சார்பாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறோம் என்று அவர் இன்று ஒரு முகநூல்பதிவில் தெரிவித்தார்.
இந்த துயரமான தருணங்களில், ஞானமும் பொறுமையும் முக்கியம். பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய வன்முறைச் செயல்களைப் பொறுத்துக் கொள்ளக்கூடாது என்றும் டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm