
செய்திகள் மலேசியா
போப் பிரான்சிஸின் இறுதி சடங்கில் மலேசியாவிலிருந்து அசாலினா, இவோன் ஆகியோர் கலந்து கொள்வர்: விஸ்மா புத்ரா
கோலாலம்பூர்:
மறைந்த போப் பிரான்சிஸின் அரச இறுதிச் சடங்கில் மலேசியாவைப் பிரதிநித்துப் பிரதமர் துறையின் சட்ட மற்றும் கழகச் சீர்த்திருத்த அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சையத், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோ எவோன் பெனடிக் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று வெளியுறவு அமைச்சகம், விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
மறைந்த போப் பிரான்சிஸின் அரச இறுதிச் சடங்கு ஏப்ரல் 26-ஆம் தேதி வட்டிகன் நகரில் நடைபெறவுள்ளது.
அரசு இறுதிச் சடங்கில் வட்டிகன் நகரத்தின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஒரு புனிதமான திருப்பலி நடைபெறும்.
இதற்கு கார்டினல்கள் கல்லூரியின் டீன் ஜியோவானி பாட்டிஸ்டா ரே தலைமை தாங்குவார்.
திருப்பலியைத் தொடர்ந்து, அவரின் உடல் ரோமில் உள்ள சாண்டா மரியா மாகியோர் பசிலிக்காவிற்குச் செல்லும் சடங்கு ஊர்வலம் நடைபெறும்.
அங்கு அவர் அடக்கம் செய்யப்படுவார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm