
செய்திகள் மலேசியா
உயர் கல்வி இலக்கை அடைய மாணவர்களை தயார்படுத்துவதே எச்சிபி கல்வி மையத்தின் திட்டம்: விக்னேஷ்
அம்பாங்:
உயர் கல்வி இலக்கை அடைய மாணவர்களை தயார்படுத்துவதே எச்சிபி கல்வி மையத்தின் திட்டமாகும்.
மலேசிய பியோன் கல்வி நிறுவனம் நிர்வாக இயக்குநர் விக்னேஷ் கிருஷ்ணகுமார் இதனை தெரிவித்தார்.
பியோன் மலேசியாவின் கீழ் இந்த எச்சிபி கல்வி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இம்மையத்தின் கீழ் மாணவர்களுக்கு பல திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
குறிப்பாக அனைத்து மாணவர்களுக்கும் எதிர்காலத்தில் என்ன உயர் கல்வி பயில வேண்டும் என்ற இலக்கு இருக்கும்.
ஆனால் அந்த இலக்கை எப்படி அடைய வேண்டும் என்று தெரியாது. குறிப்பாக அதற்கா எந்த பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும் என்று தெரியாது.
இதை எல்லாம் மாணவர்களுக்கு முறையாக வழிகாட்டப்படும் என்று விக்னேஷ் கூறினார்.
இதனிடையே எச்சிபி கல்வி மையம் பாடப்புத்தகங்கள், தேர்வுகளுக்கு அப்பாற்பட்ட கல்விக்கான முழுமையான அணுகுமுறையை நம்புகிறது.
கல்வித் திறன், ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட வளர்ச்சி இரண்டையும் ஆதரிப்பதே எங்கள் தொலைதூர நோக்கமாகும்.
இதன் அடிப்படையில் படிவம் 1 முதல் படிவம் 5 வரையிலான மாணவர்களுக்கு டியூஷன் உட்பட பல பயிற்சிகளை வழங்கப்படுகிறது.
இதில் பி40 மாணவர்களுக்கு முழு உதவித் தொகைகளை வழங்கப்படவுள்ளதும்
அதோடு, இந்த திட்டம் முதல் மாதத்திற்கு அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் எதிர்காலத்தில் கூடுதல் உதவித் தொகை வாய்ப்புகள் அறிவிக்கப்படும்.
இந்த உதவி பல மாணவர்கள், தேவைப்படும் குடும்பங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று எச்சிபி கல்வி மையத்தின் தலைமையாசிரியர் முருக நாதன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm