நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சைட் சாடிக்கிற்கு எதிரான மோசடி வழக்கில் ஜூன் 25-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்

கோலாலம்பூர்:

பெர்சத்து கட்சியின்   இளைஞர் பிரிவான  அங்காத்தான் பெர்சத்து அனாக் மூடா (அர்மாடா) நிதி சம்பந்தப்பட்ட  குற்றவியல் நம்பிக்கை மோசடி, சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளில்  தனக்கு விதிக்கப்பட்டத் தண்டனையை எதிர்த்து  மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் தாக்கல் செய்த மேல்முறையீடு மீதான தீர்ப்பு ஜூன் 25-ஆம் தேதி வழங்கப்படும்.

இன்று பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டபோது  அரசு துணை வழக்கறிஞர் டத்தோ வான் ஷஹாருடின் வான் லாடின் இந்த தேதியை அறிவித்தார்.

அதே நேரத்தில் சைட் சாடிக்கின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் டத்தோ ஹிஸ்யாம் தே போ தேக்கும் இந்தத்  தேதியை உறுதிப்படுத்தினார்.

மேல்முறையீட்டு நீதிமன்ற துணைப் பதிவாளர் முகமது நூர் ஃபிர்டாவுஸ்  ரோஸ்லி முன்னிலையில் ஸூம் மூலம் இன்று நடைபெற்ற நிர்வாக வழக்கின் போது இந்த தேதி நிர்ணயிக்கப்பட்டது என்று ஷஹாருடின் கூறினார்.

டத்தோ அகமது  ஜைடி இப்ராஹிம், டத்தோ அஸ்மான் அப்துல்லா மற்றும் டத்தோ நூரின் படாருடின் ஆகியோர் அடங்கிய  மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில்  அரசுத் தரப்பும் எதிர்த் தரப்பும் கடந்த  ஏப்ரல் 17ஆம் தேதி தங்கள் வாதங்களை முடித்துக் கொண்டன.

குற்றவியல் நம்பிக்கை மோசடி, சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் அர்மாடா நிதியை உள்ளடக்கிய பணமோசடி ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளில் சைட்  குற்றவாளி என கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்பளித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், 

அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை, இரண்டு பிரம்படி மற்றும் 1 கோடி வெள்ளி அபராதம் விதித்தது.

முப்பத்திரண்டு வயதான சைட் சாடிக் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset