நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாக்குமுலம் வழங்க 8-ஆவது முறையாக எம்ஏசிசி தலைமையகத்தில் இஸ்மாயில் சப்ரி முன்னிலையானார்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் வாக்குமுலம் வழங்க 8-ஆவது முறையாக எம்ஏசிசி தலைமையகத்தில் இன்று மீண்டும் முன்னிலையானார்.

இன்று காலை 11 மணியளவில் அவர் எம்ஏசிசி தலைமையகத்தை வந்தடைந்தார். 

கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி எம்ஏசிசியிடம் அவர் சமர்பித்த சொத்துடைமை விவகாரம் தொடர்பாக இன்று வாக்குமூலம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இது எம்ஏசிசி-யின் சட்டம் 2009 இன் பிரிவு 36(1) இன் கீழ் உட்படுத்தப்பட்டது. 

அவரின் முன்னாள் மூத்த அதிகாரிகள் நான்கு பேர் சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் பணமோசடி வழக்கு விசாரணை தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது. 

முன்னதாக, மார்ச் 3-ஆம் தேதி இஸ்மாயில் சப்ரிபின் பாதுகாப்பு இல்லத்தில் சுமார் 170 மில்லியன் ரொக்கமும் 16 கிலோ தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset