நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2024-ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் வெளியானது: 14,179 மாணவர்கள் அனைத்துப் பாடங்களில் ஏ பெற்றுள்ளனர்

கோலாலன்பூர்:

2024-ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், நாடு முழுவதும் மொத்தம் மாணவர்கள் அனைத்துப் பாடங்களில் A+, A, A- மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அனைத்துப் பாடங்களிலும் A+, A, A- மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 3.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. 

 11,713 மாணவர்கள் மட்டுமே கடந்தாண்டு அனைத்துப் பாடங்களிலும் A+, A, A- மதிப்பெண்கள் பெற்றனர்.

தேசிய சராசரி புள்ளி விழுக்காடு இவ்வாண்டு 4.49-க்கு உயர்ந்திருப்பதாக தலைமை கல்வி இயக்குநர் Azman Adnan தெரிவித்தார். 

மேலும், அனைத்துப் பாடங்களிலும் குறைந்தது C மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகாரித்துள்ளது. இவ்வாண்டு 86,040 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் குறைந்தது C மதிப்பெண் பெற்றனர். 

குறைந்தபட்சம்  E மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையும் இவ்வாண்டு 136,791 ஆக அதிகரித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset