
செய்திகள் மலேசியா
கோலாலம்பூர் கோபுரம் மீண்டும் திறக்கப்படுவது குறித்துத் தகவல் தொடர்பு அமைச்சகத்துடன் ஆலோசனை செய்யப்படுகிறது: LSH Service Nasters Sdn Bhd
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் கோபுரம் மீண்டும் திறக்கப்படுவது குறித்துத் தகவல் தொடர்பு அமைச்சகத்துடன் ஆலோசனை செய்யப்படுவதாக அதன் புதிய செயல்பாட்டு நிறுவனம். LSH Service Nasters நிறுவனம் தெரிவித்துள்ளது.
பழுது பார்க்கும் பணிகளும் மேம்பாட்டு பணிகளும் நிறைவடைந்தப் பின் பொது மக்களின் பார்வைக்காக கோலாலம்பூர் கோபுரம் மீண்டும் பொது மக்களின் பார்வைக்காகத் திறக்கப்படும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி Khairil Faizal Othman தெரிவித்தார்.
கோலாலம்பூர் கோபுரம் மீண்டும் பொது மக்களின் பார்வைக்காகத் திறக்கப்படுவதற்கு முன் அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களும் பரிசோதனை செய்யப்படும் என்றார் அவர்,
தற்போது மேம்பாட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறன.
கோலாலம்பூர் கோபுரத்தின் தற்காலிக மூடல் சுற்றுலாத் துறையை கணிசமாகப் பாதித்துள்ளது.
ஏனெனில் வழக்கமாக தினமும் 1,000 முதல் 1,500 சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை மேற்கொண்டிருந்ததாக Khairil Faizal Othman தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm