
செய்திகள் மலேசியா
நபிகள் நாயகம், இஸ்லாம் சமயத்தை இழிவுப்படுத்திய முதியவர் விசாரிக்கப்பட்டார்: மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையம் நடவடிக்கை
பெட்டாலிங் ஜெயா:
நபிகள் நாயகம், இஸ்லாம் சமயத்தை இழிவுப்படுத்திய முதியவர் ஒருவர் விசாரிக்கப்பட்டார்.
மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்தது
63 வயதுடைய முதியவர், முகநூல் சமூக ஊடகத்தின் வாயிலாக இந்த குற்றத்தைப் புரிந்ததாகவும் இஸ்கண்டார் புத்ரி காவல்துறையினர் அவரிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.
விசாரணை அறிக்கையானது துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்பிக்கப்படும் என்று எம்.சி.எம்.சி குறிப்பிட்டது
இந்த விவகாரம் 1998 தொடர்பு பல்லூடக சட்டத்தின் செக்ஷன் 233 இன் கீழ் விசாரிக்கப்பட்டது
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 லட்சம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
இனம், சமயம், ஆட்சியாளர் ஆகியவை உட்படுத்திய 3R விவகாரத்தை எழுப்பும் தரப்புக்கு எதிராக விட்டுகொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்று எம்.சி.எம்.சி தெரிவித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm