
செய்திகள் மலேசியா
இஸ்தான்புல்லை தாக்கிய நிலநடுக்கத்தின் பதற்றமான அனுபவங்களை துணைப் பிரதமர் பகிர்ந்து கொண்டார்
இஸ்தான்புல்:
துருக்கி, இங்கிலாந்து நாடுகளுக்கு பரபரப்பான பணிப் பயண அட்டவணை இருந்தபோதிலும்,
துணைப் பிரதமர் ஃபாடில்லா யூசோப்பின் குழுவினர் இஸ்தான்புல்லில் இருந்தபோது நில நடுக்கத்தின் பதற்றமான தருணங்களை அனுபவித்தனர்.
நேற்று புதன்கிழமை 6.2 ரிக்டர் அளவிலான அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இஸ்தான்புல்லை ஒரு வலுவான நிலநடுக்கம் உலுக்கியபோது, நானும் எனது குழுவினரும் இங்கிலாந்துக்கான பயணத்தைத் தொடர இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்ததாக ஃபாடில்லா கூறினார்.
இந்நிலையில் இஸ்தான்புலை நிலநடுக்கம் தாக்கியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாங்கள் விமான நிலைய கட்டிடத்திலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டனர்.
முதல் நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்தது. சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் கட்டிடத்திற்குள் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டோம்.
இருப்பினும், சிறிது நேரத்திலேயே இரண்டாவது முறையாக குறைந்த வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் சுமார் 10 நிமிடங்கள் கட்டிடத்தை விட்டு வெளியேறும்படி எங்களிடம் கேட்கப்பட்டது என்று அவர் கூறினார்.
இச்சம்பவத்தின் புகைப்படத்தையும் அவர் முகநூலில் பகிர்ந்து கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm