
செய்திகள் மலேசியா
கோவில் ஹராம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க பிரதமருக்கு அமைச்சரவையின் ஒப்புதல் தேவையில்லை: டத்தோஸ்ரீ சரவணன்
தாப்பா:
கோவில் ஹராம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க பிரதமருக்கு அமைச்சரவையின் ஒப்புதல் தேவையில்லை.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
நாட்டில் கோவில் ஹராம் என்ற வார்த்தையை அரசு நிறுவனங்கள், துறைகள் பயன்படுத்துவதைத் தடுக்கும் உத்தரவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு பிரதமருக்கு அமைச்சரவையின் ஒப்புதல் தேவையில்லை.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டியது கவலைக்குரியது.
ஏனெனில் இந்த விவகாரத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரிடம் ஏற்கனவே எடுத்துச் சென்றுவிட்டதாக அவர் கூறினார்.
இந்திய சமூகத்தின் வேண்டுகோளின் அஅடிப்படையில் கோயில் ஹராம் என்ற வார்த்தையை அரசாங்கம் பயன்படுத்துவதைத் தடை செய்வது குறித்து பிரதமர் உடனடியாக பரிசீலிக்க வேண்டும்.
இதற்கு பிரதமரின் முடிவு போதுமானது. இந்த விண்ணப்பத்தை அமைச்சரவை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.
இது தொடர்பில் நான் பிரதமருக்கு ஒரு கடிதத்தை அனுப்பினேம்.
ஒற்றுமை அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபஹ்மி ஃபட்சில் அமைச்சரவை அதைப் பற்றி விவாதிக்கவில்லை என்று கூறினார்.
என்னை பொருத்த வரையில் அமைச்சரவை மட்டத்தில் இது பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.
பிரதமருக்கு நான் தெரிவித்தது இந்திய சமூகத்தின் அடிமட்டக் குரலாகும்.
இதை பிரதமரும் அரசாங்கமும் அலட்சியமாக பார்க்கக் கூடாது என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm