நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹோட்டலை தொடர்ந்து பல்வேறு வர்த்தகத் துறையில் கால்பதிக்க மாவார் கூட்டுறவுக் கழகம் திட்டமிட்டுள்ளது

சௌஜானா புத்ரா:

ஹோட்டலை தொடர்ந்து பல்வேறு வர்த்தகத் துறையில் கால்பதிக்க மாவார் கூட்டுறவுக் கழகம் திட்டமிட்டுள்ளது.

அக் கூட்டறவுக் கழகத்தின் தலைவர் அப்துல் ஹலிம் இதனை கூறினார்.

மாவார் எனப்படும் மலேசிய முஸ்லிம் மளிகை கடைகள் வியாபாரிகள் சங்கம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதில் உறுப்பினர்கள் பயன் பெறுவதுடன் அவர்களுக்கான நலத் திட்டங்களை மேற்கொள்ள மாவார் கூட்டுறவுக் கழகம் தொடங்கப்பட்டது.

இக் கூட்டுறவுக் கழகத்தின் கீழ் ஹோட்டல் ஒன்றை திறக்க முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே ஹோட்டல் துறையில் அனுபவம் கொண்ட செயலாளர் சுஹுமுடினிடம் இந்த ஹோட்டலை திறக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.

பல்வேறு முயற்சிகளுக்கு பின் மாஹ்சா பல்கலைக்கழகம் சௌஜானா புத்ராவில் ஹோட்டல் திறப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டது.

5 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் ரிங்கிட் செலவில் மாவார் இன் எனும் ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது.

எச்ஆர்டி கோர்ப்பின் முன்னாள் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இந்த ஹோட்டலை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

மேலும் ஹோட்டலை தொடர்ந்து பல வர்த்தகத் துறையிலும் கால்பதிக்க மாவார் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று அப்துல் ஹலிம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset