நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிலாளர் தினக்  கண்காட்சியில் 10,000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன: ஸ்டிவன் சிம்

புத்ரா ஜெயா: 

இவ்வாண்டு நடைபெறும் தொழிலாளர் தினக் கண்காட்சியில் 10,000 வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களிலும்  தனியார் நிறுவனங்களிலும் உள்ள காலியிடங்களுக்கான வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன என்று அவர் கூறினார்.

புக்கிட் ஜாலில் அக்சியாத்தா அரேனா அரங்கில் இந்தத் தொழிலாளர் தினக் கண்காட்சி மூன்று நாள்கள் நடைபெறவுள்ளன. 

ஏப்ரல் 28 முதல் மே 1 வரை திட்டமிடப்பட்டுள்ள இக்கண்காட்சியின் போது அரசாங்கம் பல புதிய கொள்கைகள் மற்றும் திட்டங்களை அறிவிக்கும் என்றும் சிம் கூறினார்.

MYFutureJobs மொபைல் செயலியை அறிமுகப்படுத்துவதன் மூலம் அமைச்சகம் ஒரு டிஜிட்டல் முயற்சியையும் தொடங்கும் என்று சிம் மேலும் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset