நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செயற்கை நுண்ணறிவில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பின்தங்கி விடக்கூடாது: சுரேன் கந்தா

ஷாஆலம்:

ஏஐ எனப்படும்செயற்கை நுண்ணறிவில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பின்தங்கி விடக்கூடாது.

ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா இதனை வலியுறுத்தினார்.

ஶ்ரீ முருகன் கல்வி நிலையம் கூகுள் மலேசியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து தற்போது இணைந்து செயல்படுகிறது.

இந்திய மாணவர்களிடையே செயற்கை நுண்ணறிவு குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த கூட்டணி உருவாகியுள்ளது.

கூகுள் மலேசியாவுடனான இந்த கூட்டணி மிகவும் முக்கியமானதாக ஶ்ரீ முருகன் கல்வி நிலையம் கருதுகிறது.

கடந்த காலங்களில் கணினி, இணையம் முக்கியமானதாக இருந்தது. ஆனால் இப்போது செயற்கை நுண்ணறவை அனைவரும் கற்று, தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையாகி விட்டது.

அதன் அடிப்படையில் ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சிகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது.

அதே போன்று தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் இதுபோன்ற பயிற்சி, பட்டறைகளை நடத்த ஶ்ரீ முருகன் கல்வி நிலையம் திட்டமிட்டு வருகிறது.

தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆதரவு வழங்கினால் இத்திட்டம் வெற்றி பெறும் என்று சுரேன் கந்தா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset