
செய்திகள் மலேசியா
செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வை மாணவர்களும் பெற்றோர்களும் கொண்டிருக்க வேண்டும்: டாக்டர் தேவிகா
ஷாஆலம்:
செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வை மாணவர்களும் பெற்றோர்களும் கொண்டிருக்க வேண்டும்
சன்வே பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் தேவிகா இதனை வலியுறுத்தினார்.
ஷாஆலம் ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் செயற்கை நுண்ணறிவு பட்டறை நடைபெற்றது.
குறிப்பாக மாணவர்களும் பெற்றோர்களும் பயன் பெறும் வகையில் இப்பட்டறை நடைபெற்றது. இப்பட்டறையில் உரையாற்றியது மகிழ்ச்சி.
காரணம் உலகத்தை ஆக்கிரமிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு உருவாகி வருகிறது.
அதனால் பள்ளி மாணவர்கள் இந்த செயற்கை நுண்ணறிவை பற்றி தெரிந்து, புரிந்து, அதை பயன்படுத்த வேண்டும்.
அதே வேளையில் இந்த செயற்கை நுண்ணறிவில் நன்மையும் தீமையும் உள்ளன.
அதன் அடிப்படை மாணவர்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் போது, பெற்றோர்கள் அதை கண்காணிக்க வேண்டும்.
ஆக இந்த செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வை மாணவர்களும் பெற்றோர்களும் கொண்டிருக்க வேண்டும்.
இது தான் முக்கியம் என்று டாக்டர் தேவிகா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm