நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய நில நிதி கூட்டுறவு நிறுவன உறுப்பினர்களுக்கான  லாப ஈவு அதிகரிக்கப்படும்: டத்தோ சகாதேவன்

ஈப்போ:

தேசிய நில நிதி கூட்டுறவு நிறுவன உறுப்பினர்களுக்கான லாப ஈவு அதிகரிக்கப்படும் என்று அதன் தலைமை இயக்குநர் டத்தோ ப. சகாதேவன் இதனை கூறினார்.

உறுப்பினர்களுக்கு கடந்த ஆண்டு 7 விழுக்காடு லாப ஈவு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அது கூடுதலாக அதிகரிக்கும் .

அதன் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இவ்வாண்டு ஜூன் மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

ஈப்போ கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பேரா மாநிலத்தில் அதன் தேசிய நில நிதி கூட்டிறவு நிறுவன பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்  இதனைத் தெரிவித்தார்.

தேசிய நில நிதி கூட்டிறவு நிறுவனம் லாபகரமாக செயல்பட்டு வருகிறது. அது உறுப்பினர்களின் நன்மைக்கு தொடர்ந்து பல நல திட்டங்கள் தொடரும்.

தோட்டத் துறையில் தொழிலாளர்கள் பற்றாக் குறை நிலவினாலும் அதனை சமாளித்து செயல்படவேண்டிய நிலையில் உள்ளது.

இதனிடையே இங்கு சுமுகமாக முறையில் நடைபெற்ற பேராளர்கள் தேர்வுக்கான தேர்தல் சுமுகமாக நடைபெற்றது. இதில் 845 பேராளர்கள் கலந்துக்கொண்டு வாக்களித்துள்ளனர்.

அதில் 18 பேராளர்கள் தேர்வுக்கு 21 பேர் போட்டியிட்டனர். தேர்வு செய்யப்பட்ட 18 பேராளர்களின் பெயர்களை டத்தோ பி. சகாதேவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset