நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியாவுக்கு கருப்பு கை குரங்கு, சிவப்பு காது ஆமைகளை கடத்த முயன்ற ஆடவர் கைது

சிப்பாங்:

இந்தியாவுக்கு கருப்பு கை குரங்கு, சிவப்பு காது ஆமைகளை கடத்த முயன்ற இந்திய ஆடவர் கைது செய்யப்பட்டார்.

தேசிய வனவிலங்கு பாதுகாப்பு இலாகாவின் இயக்குநர்  டத்தோ அப்துல் காதிர் அபு ஹாஷிம் இதனை  உறுதிப்படுத்தினார்.

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் வழியாக கருப்பு கை குரங்கு, சிவப்பு காது ஆமைகளை கடத்த முயன்ற இந்தியரின் முயற்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட பின்னர் தோல்வியடைந்தது.

கடத்தலுக்கு கழுதையாக அந்த நபர்  பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

இலாகாவின் அதிகாரிகள், கேஎல்ஐஏ  போலிஸ் அதிகாரிகளின்  விரைவான நடவடிக்கையின் விளைவாக இரவு 10 மணியளவில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் இந்தியாவின் திருச்சிக்கு விமானத்தில் ஏற முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

21 வயதான அந்த ஆடவர் எடுத்துச் சென்ற பயண பெட்டிகளை சோதனை செய்த போது, சந்தேகத்திற்குரிய கருப்பு கை குரங்கு, சிவப்பு காது ஆமைகளை  கண்டுபிடிக்கப்பட்டன.

கைதான  ஆடவர் வனவிலங்குகள் தொடர்பான எந்த அங்கீகார ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தவறிவிட்டார்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வனவிலங்குகளின் மதிப்பு 12,200 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset