
செய்திகள் மலேசியா
தமிழ், மாண்டரின் மொழிகளை தேசியப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்துங்கள்: பெர்சத்துவின் முன்னாள் தலைவர்
கோலாலம்பூர்:
தமிழ், மாண்டரின் மொழிகளை தேசியப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று பெர்சத்துவின் முன்னாள் தலைவர் மகாதீர் ராய்ஸ் கூறினார்.
பல ஆசியான் நாடுகளின் மொழிகளை விருப்ப மொழிகளாக வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தைத் தொடர்ந்து,
தேசியப் பள்ளிகளில் தமிழ், மாண்டரின் மொழி கற்பித்தலை விரிவுபடுத்தப்பட வேண்டும்.
பன்மொழிப் பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்கு அடிப்படையாக இருக்க முடியும். அவை நாட்டின் செல்வத்தின் ஒரு பகுதியாக மதிக்கப்பட வேண்டும்.
வேறொரு மொழியைக் கற்றுக் கொள்வதன் மூலம், மக்கள் தங்கள் அடையாளத்தை இழக்க மாட்டார்கள். மாறாக ஒருவரையொருவர் தெரிந்து கொள்ளவும், மதிக்கவும், புரிந்துகொள்ளவும் வாய்ப்புகளைத் திறப்பார்கள்.
பல மொழிகளுக்குத் திறந்திருக்கும் ஒரு வகுப்பறையில், மாணவர்கள் பாடங்களைக் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், ஒருவரையொருவர் அறிந்து கொள்ளவும், மதிக்கவும், புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்கிறார்கள் என்று அவர் கூறினார்.
முன்னதாக கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக், பல ஆசியான் மொழிகளை உள்ளடக்கிய வகையில் மலேசியா பள்ளிகளில் அதன் தேர்வு மொழி சலுகைகளை விரிவுபடுத்துவதாகக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm