
செய்திகள் தமிழ் தொடர்புகள்
உச்ச நீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது: விஜய் பாராட்டு
சென்னை:
“இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன்” என தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வக்பு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்பு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இஸ்லாமியர்களின் உரிமையான வக்பு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய அபிஷேக் சிங்விக்கும், அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 12:35 pm
தமிழகத்தில் சில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
April 18, 2025, 4:59 pm
தமிழ்நாடு டெல்லிக்கு எப்பவும் அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்: முதல்வர் ஸ்டாலின்
April 16, 2025, 9:21 pm
10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஏப்ரலில் 100 மி.மீ. மழை பொழிவு
April 16, 2025, 8:00 pm
புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடுங்கள்: எடப்பாடி பழனிச்சாமி
April 16, 2025, 5:59 pm
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார்
April 16, 2025, 2:18 pm