நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

40.5 மில்லியன் ரிங்கிட்டில்  ரந்தாவ் பஞ்ஜாங், சு ங்காய் கோலோக் இடையிலான  இரண்டாவது பாலம்: 2028இல் கட்டி முடிக்கப்படும்

பேங்காக்:

கிட்டத்தட்ட 40.5 மில்லியன் ரிங்கிட்டில் ரந்தாவ் பஞ்சாங்க், சு ங்காய் கோலோக் இடையிலான இரண்டாவது பாலம் வரும் 2028ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும்.

மலேசியாவும் தாய்லாந்தும் இன்று இரண்டாவது ரந்தாவ் பஞ்ஜாங், சு ங்காய் கோலோக் பாலம் கட்டுமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் குறித்தன, மேலும்  இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு பெரிய எல்லை தாண்டிய உள்கட்டமைப்புத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தைக் குறிக்கிறது.

இரண்டு பகுதிகளையும் இணைக்கும் தற்போதைய பாலத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

ஒப்பந்தத்தில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி,  தாய்லாந்தின் துணைப் பிரதமரும் போக்குவரத்து அமைச்சருமான சூரிய ஜுவாங்ரூங்கிட் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அரசு மாளிகையில் நடந்த ஒப்பந்தப் பரிமாற்ற விழாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,  தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

டத்தோஶ்ரீ அன்வார் இன்று தொடங்கி இரண்டு நாள் அலுவல் பயணமாக தாய்லாந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset