நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் பயங்கர தீ சம்பவத்தில் சீனா நாட்டு ஆடவர் மரணம்: போலீஸ் விசாரணை  

ஜொகூர் பாரு: 

நேற்றிரவு ஜொகூர் மாநிலத்தின் தாமான் டாயாவில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் சீனா நாட்டு ஆடவர் மரணமடைந்தார் 

சீனா நாட்டு ஆடவர் ஒருவர் மரணமடைந்த வேளையில் மற்றொரு உள்ளூர் ஆடவர் படுகாயமடைந்தார் 

தீ விபத்து குறித்து தங்கள் தரப்புக்கு இரவு 10.54 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக தெப்ராவ் தீயணைப்பு மீட்புப்படையின் நடவடிக்கை பிரிவு மூத்த அதிகாரி முஹம்மத் ஷாஹிர் இக்வான் மொஹம்மத் கூறினார் 

தீ விபத்தில் சிக்கிய வீடு ஒன்று 80 விழுக்காடு வரை தீயில் முற்றாக அழிந்தது 

மரணமடைந்த ஆடவரின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார் 

அதிகாலை 1.30 மணிக்கு தீ அணைக்கும் நடவடிக்கை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது 

சீனா நாட்டு ஆடவர் மரணமடைந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணை செய்து வருவதாக தெற்கு ஜொகூர் பாரு மாவட்ட காவல்துறை தலைவர் ஏ.சிபி ரவுப் செலாமாட் உறுதிப்படுத்தினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset