
செய்திகள் மலேசியா
சீனா அதிபர் ஷி ஜின்பிங் மலேசியா வருகை வெற்றி கண்டுள்ளது: தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் பெருமிதம்
கோலாலம்பூர்:
சீனா அதிபர் ஷி ஜின்பிங் அரசு முறை பயணமாக மூன்று நாட்கள் மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டது வெற்றி அடைந்துள்ளதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் பெருமிதத்துடன் கூறினார்
அவரின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான அரச தந்திர உறவினை மேலும் வலுச்சேர்த்துள்ளது என்று மடானி அரசாங்க பேச்சாளருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
மேலும், மலேசியா- சீனா இரு நாடுகளும் 31 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதுவே இரு நாடுகளுக்கும் இடையிலான வெற்றியைக் குறிக்கிறது என்று செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்
முன்னதாக, கடந்த ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை சீனா அதிபர் ஷி ஜின்பிங் மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டிருந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm