நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐபோனின் விலை ஒரு காரின் விலைக்கு நிகராக உயருவதற்கு சாத்தியமில்லை: தெங்கு ஜப்ருல்

கோலாலம்பூர்: 

அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி தொடர்ந்து அதிகரித்தால், ஆப்பிளின் ஐபோன் ஸ்மார்ட்போனின் விலை உயரக்கூடும் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் கூறினார்.

இருப்பினும், ஒரு ஐபோனின் விலை ஒரு காரின் விலைக்கு உயருவதற்கு சாத்தியமில்லை என்றார் அவர். 

ஐபோன் உற்பத்திக்கான கூறுகள் உலகம் முழுவதிலுமிருந்து வருகின்றன.

இதில் தைவானில் இருந்து சிப்கள், தென் கொரியாவில் இருந்து அதன் ஸ்கிரின், சீனாவில் இருந்து பேட்டரிகள், அமெரிக்காவிலிருந்து மோடம்கள் மற்றும் நினைவகம், ஜப்பானில் இருந்து சேமிப்பு மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து கேமராக்கள் ஆகியவை அடங்கும்.

இவை இறுதியில் சீனாவில் இணைக்கப்படுகின்றன, 

ஒரு ஐபோனின் விலை US$549.73 (RM2,424) என்றும், 145 சதவீத வரி விதிக்கப்பட்டால், அது US$1,400 (RM6,174) ஐ எட்டக்கூடும் என்றும் தெங்கு ஜஃப்ருல் கூறினார்.

முழுமையாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டால், அதன் விலை US$3,500 அல்லது RM16,000 ஐ எட்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.
 
அமெரிக்காவில் விலைகள் உயரும்போது, ​​உலகளாவிய ஐபோன் விலைகள் பொதுவாக அமெரிக்க விலைகளைப் பின்பற்றுவதால், மற்ற நாடுகளும் பாதிக்கப்படுகின்றன.

முன்னதாக, அமெரிக்கா ஐபோன்களுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீதான வரி முடிவைத் தொடர்ந்து ஐபோன்களின் விலை 30 முதல் 43 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

கட்டணங்கள் தொடர்ந்தால், ஆப்பிள் செலவுகளை ஏற்க வேண்டுமா அல்லது நுகர்வோருக்கு வழங்க வேண்டுமா என்ற கடினமான தேர்வை எதிர்கொள்ளும்.

கடந்த சனிக்கிழமை, அமெரிக்கா ஸ்மார்ட்போன்கள், கணினித் திரைகள், சிப்கள் மற்றும் மின்னணு கூறுகளுக்கு வரிகளிலிருந்து விலக்கு அளித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து மின்னணு பொருட்களுக்கும் பொருந்தும்.

சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகம் குறைந்தபட்ச வரியை 145 சதவீதம் விதித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் கருத்து தெரிவித்த தெங்கு சஃப்ருல், மலேசியா உலகளாவிய விநியோகச் சங்கிலியின் ஒரு முக்கிய அங்கமாகவும், நாட்டின் முக்கிய ஏற்றுமதிகளில் குறைக்கடத்திகள் இருப்பதாகவும் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset