செய்திகள் தமிழ் தொடர்புகள்
10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஏப்ரலில் 100 மி.மீ. மழை பொழிவு
சென்னை:
10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஏப்ரலில் 100 மி.மீ. மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை கனமழை பெய்தது.
சிறுது நேரம் பெய்தாலும் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. சென்னையின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 100 மி.மீ. பெய்துள்ளது. தற்போது மழைமேகக் கூட்டங்கள் சிறுசேரி, கேளம்பாக்கம், மகாபலிபுரம், பொன்மார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் மற்றும் ஈசிஆர் பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி 100 மி.மீ. மழை பெய்த நிலையில், 10 ஆண்டுகள் கழித்து இன்று(ஏப். 16) பெய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த 3 மணி நேரத்துக்கு(மாலை 4 மணி வரை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 26, 2026, 4:12 pm
தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டரை ரத்து செய்தது தமிழ்நாடு அரசு
June 25, 2026, 2:17 pm
அரசுப் பேருந்தில் பெரம்பூருக்கு பயணித்த முதல்வர் விஜய்
June 24, 2026, 11:18 am
வேளாண் அமைச்சரின் சொந்தத் தொகுதியில் ஆயிரக்கணக்கான நெல் முட்டைகள் மழையில் நனைந்து நாசம்
June 23, 2026, 10:20 pm
நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஜூன் 28-இல் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
June 23, 2026, 1:23 pm
1990 முதல் மக்கள் பணி செய்து வருகிறேன்: சட்டசபையில் விஜய் பேச்சு
June 22, 2026, 11:09 am
முதல் அமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
June 18, 2026, 4:15 pm
தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்
June 18, 2026, 10:39 am
