
செய்திகள் விளையாட்டு
IPL 2025: நீண்ட தோல்விக்குப் பிறகு வென்றது சி எஸ் கே
லக்னோ:
நடப்பு ஐபிஎல் சீசனின் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.
அஸ்வின், கான்வே இருவரும் சென்னை அணியின் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு மாற்றாக ஷேக் ரஷீத், ஓவர்டன் ஆகியோர் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றனர்.
லக்னோ அணிக்காக மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் இணைந்து இன்னிங்ஸை துவக்கம் செய்தனர். கலீல் அஹ்மது வீசிய முதல் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் மார்க்ரம். ராகுல் திரிபாதி அற்புதமாக கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார்.
தொடர்ந்து அன்ஷுல் காம்போஜ் வீசிய 4-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார் நிக்கோலஸ் பூரன். மார்ஷ் 30, ஆயுஷ் படோனி 22 ரன்கள் எடுத்து வெளியேறினர். அப்துல் சமத் 20 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தார். 49 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸின் இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். அவரது இன்னிங்ஸில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும். 20 ஓவர்களில் 166 ரன்களை எடுத்தது லக்னோ அணி.
167 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இது ஷேக் ரஷீதுக்கு முதல் ஐபிஎல் ஆட்டம்.
ஸ்வீட் சர்ப்ரைசாக 19 பந்துகளில் 6 பவுண்டரிகள் உட்பட 27 ரன்கள் அடித்து அணிக்கு புதிய நம்பிக்கை ஊட்டி வெளியேறினார் ஷேக் ரஷீத்.
22 ரன்களில் 37 ரன்கள் அடித்து மார்க்ரம் வீசிய பந்தில் அவுட் ஆனார் ரச்சின் ரவீந்திரா. திரிபாதி 9, ஜடேஜா 7 ரன்களுடன் வெளியேறவே, அடுத்து இறங்கிய தூபே 37 பந்துகளுக்கு 43 ரன்கள் என நிதானமாக ஆடினார். அதில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும்.
விஜய் ஷங்கர் 9 ரன்களுடன் கிளம்பவே, அடுத்ததாக களமிறங்கிய தோனி அணியின் 11 பந்துகளில் 26 பந்துகள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன்படி 19.3 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சிஎஸ்கே அணிக்கு இந்த வெற்றி மிகவும் தேவையாக பார்க்கப்பட்டது.
தற்போது புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி கடைசியாக 10வது இடத்தில் உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 11:30 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி தோல்வி
May 1, 2025, 10:22 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா சமநிலை
May 1, 2025, 7:28 am
IPL 2025: சஹலின் சுழலில் சிக்கிய சி எஸ் கே பஞ்சாபிடம் சரண்: தொடரைவிட்டு வெளியேறியது
April 30, 2025, 9:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி வெற்றி
April 29, 2025, 10:57 am
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் அசத்தல்: 35 பந்துகளில் சதம் அடித்தார் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி
April 29, 2025, 10:32 am
முஹம்மத் சாலாவின் தலையில் மதுபானம் ஊற்றப்படவில்லை
April 29, 2025, 9:24 am
கனடாவில் மோசமான கிண்டலுக்கு ஆளான லியோனல் மெஸ்ஸி
April 28, 2025, 10:16 am
இத்தாலி சிரி அ கிண்ணம்: நபோலி வெற்றி
April 28, 2025, 9:14 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை 20ஆவது முறையாக லிவர்பூல் வென்றது
April 28, 2025, 8:48 am