நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

முஹம்மத் சாலாவின் தலையில் மதுபானம் ஊற்றப்படவில்லை

லண்டன்:

லிவர்பூல் ஆட்டக்காரர் முஹம்மத் சாலாவின் தலையில் மதுபானம் ஊற்றப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

லிவர்பூல் வீரர்கள் தங்கள் இங்கிலாந்து பிரிமியர் லீக் வெற்றியைக் கொண்டாடுவதில் மும்முரமாக இருந்தனர்.

அப்போது  முகமது சாலாவிடம் டார்வின் நுனேஸ் செய்த செயல்களைத் தொடர்ந்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளார்.

சமீப காலமாக நுனேஸ் பிரபலமடையவில்லை. ரசிகர்கள் அவரது விளையாட்டு நேரத்தைப் பற்றி சமூக ஊடகங்களில் புகார் கூறி அவரது பதிவுகளை விமர்சித்தனர்.

இந்நிலையில் வெற்றியைக் கொண்டாடும் போது சாலாவிடம் அவர் நடந்து கொண்ட விதம் சமூக ஊடகங்களில் வைரலானது.

உருகுவே வீரரான அவர் எகிப்திய நட்சத்திரத்தை நோக்கி ஓடி, தனது சக வீரரின் தலையில் மதுவை ஊற்றுவது போல் தோன்றியது.

பின்னர் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

முஸ்லிம் என்பதால் மது அருந்தாத சாலா மீது மது ஊற்றியதற்காக ரசிகர்கள் உடனடியாகக் கண்டித்தனர்.

ஆனால் அது உண்மையில் மதுபானம் இல்லை என லிவர்பூல் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset